ஆசியா நாடுகளை புரட்டி போடும் மழை…..

இந்த மாதத்தில் கனமழை காரணமாக ஆசிய நாடுகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. பாதிப்பை மட்டும் அல்லாமல் உயிர் இழப்புகளும் ஏற்படுகிறது.

இந்த பேரிடர் பாதிப்பால் பலி எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது.

இயற்கை பேரிடர்களான வெள்ளம், நிலச்சரிவு போன்றவைகளால் இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.

சீனாவில் உள்ள கொங்சிங் மாநிலம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.ஜூலை 13-ஆம் தேதி முதல் பலத்த கனமழை பெய்து வருகிறது.அதற்கு 15 பேர் பலியாகி உள்ளனர்.

கனமழையால் பேரிடர் பாதிப்புகள் குறித்து சில பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கையும், சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள புதுடெல்லியும் கனமழையால் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழியும் நிலையில் உள்ளன.

அதனை திறந்துவிட அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

கடந்த 45 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.