இந்திய வீரர்கள் தாயகம் திரும்புவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்!!
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தென்ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி பல ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையைக் கைப்பற்றியது.
கோப்பையை வென்ற பிறகு, இந்திய வீரர்கள், பயிற்சியாளர் டிராவிட் மற்றும் பலர் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ இந்திய ரசிகர்களை நெகிழ வைத்தது.
கடும் விமர்சனத்துக்குள்ளான இந்திய அணிக்கு கிடைத்த இந்த வெற்றி ஆறுதல் அளித்தது. ரோஹித், கோலி, ஜடேஜா ஆகியோர் தங்களது ஓய்வை அறிவித்தனர்.அவர்கள் இறுதியாக கோப்பையை கைப்பற்றியது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை பிசிசிஐ அறிவித்துள்ளது. இத்தொடரில் தொடர் ஆட்டநாயகனாக கருதப்படும் ஜஸ்பிரித் பும்ராவிற்கு ரூபாய் 10 லட்சமும், இறுதி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்ட விராட் கோலிக்கு ரூபாய் 2.5 லட்சமும் பரிசுத்தொகையாக அறிவித்துள்ளது. இந்நிலையில் வெற்றி கொண்டாட்டங்களை முடித்த பிறகு இந்திய அணி வீரர்கள் அனைவரும் கரீபியன் தீவுகளிலிருந்து தாயகத்திற்கு திரும்பும் நிலையில் உள்ளனர்.
ஆனால் அங்கு விடுக்கப்பட்ட சூறாவளி எச்சரிக்கை காரணமாக பார்படாஸ் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால் இந்திய வீரர்களின் தாயகம் திரும்பும் பயணம் தாமதமானது. வீரர்கள் ஹோட்டலில் பாதுகாப்பாக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow us on : click here