சிங்கப்பூருக்கு வெளிநாட்டு ஊழியர்கள் வருவதில் சிக்கல்!!

சிங்கப்பூருக்கு வெளிநாட்டு ஊழியர்கள் வருவதில் சிக்கல்!!

இப்பொழுது விசா வந்த பிறகும் ஒரு சிலரால் சிங்கப்பூர் செல்ல முடியவில்லை அதற்கான காரணம் என்ன??

முன்பு எல்லாம் விசா வருவதற்குத்தான் கால தாமதமாகும், ஆனால் இப்பொழுது விசா வந்த பிறகும் ஒரு சிலரால் சிங்கப்பூர் செல்வதற்கு மிகவும் கால தாமதமாகிறது.

சிங்கப்பூரில் பலவிதமான விசாக்கள் உள்ளது. அவை என்னவென்றால் Spass, Epass, Work permit, Shipyard permit, NTS permit ஆகிய விசாக்கள் உள்ளன. ஒவ்வொன்றிற்கும் MOM இல் இருந்து approval வர குறிப்பிட்ட நாட்கள் ஆகும்.

முன்பெல்லாம் MOM இல் இருந்து approval வந்த ஒரு சில நாட்களில் சிங்கப்பூருக்கு சென்றுவிடலாம். ஆனால் இப்பொழுது MOM இல் இருந்து approval &IP வந்த பிறகும் சிங்கப்பூருக்கு செல்ல முடியவில்லை.

அதற்கான காரணங்கள் என்னவென்றால் உங்களுக்கு விசா வந்த பிறகு MOM இல் இருந்து நீங்கள் எந்த இடத்தில் தங்க உள்ளீர்கள் என்பதை பதிவு செய்ய வேண்டும், ஏனென்றால் இப்பொழுது ரூம் கிடைப்பதில் மிகவும் சிரமமாக உள்ளது.அதனால் ரூம் பதிவு செய்ய முடியாத காரணத்தால் பல நிறுவனங்கள் IP & விசா வந்த பிறகும் கூட அவர்களது வேலை ஆட்களை சிங்கப்பூர் வர வைக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது.இதற்கு ரூம் கிடைக்காதது மிக முக்கியமான காரணம். மேலும் உங்களுக்கான ரூமை தேர்ந்தெடுத்த பிறகுதான், கம்பெனி MOM இல் பதிவு செய்தபின் உங்களை சிங்கப்பூருக்கு அழைத்து வரமுடியும். ரூம் வாடகை அதிகமாக இருப்பதாலும், ரூம் கிடைக்காத காரணத்தினாலும் உங்களுடைய ரூமை MOM இல் பதிவு செய்ய இயலவில்லை.
அதனால் சிங்கப்பூருக்கு அழைத்து வருவதில் கால தாமதமாகிறது.

ஒரு சிலருக்கு IP தேதி முடிவடைந்து விடுகிறது. அதனால் IP காலாவதி ஆகிவிடுகிறது. இதுபோன்ற கடினமான சூழ்நிலை தற்போது சிங்கப்பூரில் நிலவுகிறது.
இந்த நிலைமை விரைவில் சரியாகிவிடும் என்று நம்புவோம்.