இன்று பதவி விலகும் சிங்கப்பூர் பிரதமர்!! சிங்கப்பூர் அதிபருக்கு கடிதம்!!
சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் இன்று பதவி விலக உள்ள நிலையில் சிங்கப்பூர் அதிபரான சண்முகரத்தினம் அவர்களிடம் விலகல் கடித்தை அனுப்பி வைத்தார்.
அவர் பதவி விலகும் நாளிலேயே தமது அரசாங்கமும் பதவி விலகிவிடும் என்று அதில் குறிப்பிட்டார்.
தனக்கு 70 வயதுடைந்த சமயத்தில் தனது பிரதமர் பொறுப்பை அடுத்த தலைவரிடம் ஒப்படைக்க விரும்பியதாக கூறினார். ஆனால் கொரானா நோய்ப்பரவலால் அது தாமதமாகி விட்டதாக தெரிவித்தார்.
கிருமி தொற்றுப்பரவல் காரணம் முடிவுக்கு வந்த நிலையில் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் பணி மீண்டும் தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டது.
மக்கள் செயல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி ஒருமனதுடன் அடுத்த பிரதமராக லாரன்ஸ் வோங்கை தேர்ந்தெடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சிங்கப்பூரை வழி நடத்த திரு. வோங் அவர்கள் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg