மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்தார் சிங்கப்பூர் பிரதமர்!!

மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்தார் சிங்கப்பூர் பிரதமர்!!

சிங்கப்பூர் பிரதமர் திரு.லாரன்ஸ் வோங் ஆசியான் தலைநகர்களுக்கு அறிமுகப் பயணங்களின் முதற்கட்டமாக கோலாலம்பூருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் முகம்மது ஹாசன் உடனான சந்திப்புக்குப் பிறகு வெளியிட்ட பேஸ்புக் பதிவில் பிரதமர் வோங் இதனை தெரிவித்தார்.

சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக திரு லாரன்ஸ் வோங் மே 15 ஆம் தேதி பதவியேற்றார். இதனை தொடர்ந்து வருடாந்திர தலைவர்களின் சந்திப்பிற்கு முன் மலேசியாவிற்கு வருகை அளிக்குமாறு அந்நாட்டு பிரதமர் அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்திருந்தார்.

அடுத்த வரும் ஆண்டான 2025 – இல் ஆசியான் அமைப்பிற்கு மலேசியா தலைமை தாங்க உள்ளது. மலேசியாவுடன் இணக்கமாக பணியாற்ற சிங்கப்பூர் எதிர்பார்த்துள்ளதாக திரு.வோங் தெரிவித்தார்.

இஸ்தானாவில் திரு.முகமது ஹாசன் உடனான சந்திப்பு சிங்கப்பூர், மலேசிய உறவுகளுக்கிடையேயான வெற்றி தரும் பங்களிப்பை மேம்படுத்துவதற்கான மறுஉறுதியை இரு தலைவர்களும் செய்து கொண்டதாக திரு.வோங் கூறினார்.

மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு முகமது ஹாசன் இரண்டு நாள் பயணமாக (மே 27) சிங்கப்பூருக்கு வருகை அளித்தார்.