மீண்டும் இந்தியா பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்த சிங்கப்பூர் பிரதமர்!!
இந்தியா பிரதமராக திரு. நரேந்திர மோடி மீண்டும் பதவி ஏற்றுள்ளார். அவருக்கு உலகத் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிங்கப்பூர் பிரதமர் திரு.லாரன்ஸ் வோங் அவர்களும் தனது வாழ்த்து செய்தியை அனுப்பி தெரிவித்துள்ளார்.
“இந்தியா சிறப்பாக மாறியுள்ளது.திரு.மோடி அந்த மாற்றங்களை வழி நடத்தினார்.கடந்த பத்தாண்டுகளில் அவர் மில்லியன் கணக்கானோர்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளார்”.
இவ்வாறு தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் கூறியது.
பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா தொடர்ந்து முன்னேற்றம் அடையும் என்று திரு.வோங் நம்பிக்கை தெரிவித்தார்.
சிங்கப்பூருக்கு,இந்தியாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
இருநாடுகளுக்கும் இடையேயான அரசாந்திர உறவு ஏற்பட்டு 60 ஆண்டுகள் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றியுடன் திரு.மோடி இருக்க வேண்டும் என்று வாழ்த்தினார்.
அவரை மீண்டும் சந்திப்பதற்கும் உறவுகளை மேலும் வலுப்படுத்த இணைந்து செயல்படுவதற்கும் ஆவலுடன் காத்திருப்பதாக பிரதமர் வோங் கூறினார்.
Follow us on : click here