ஜப்பானில் அதிரடியாக உயர்ந்த அரிசியின் விலை!! மக்கள் கடும் அவதி…!!!

ஜப்பானில் அதிரடியாக உயர்ந்த அரிசியின் விலை!! மக்கள் கடும் அவதி...!!!

ஜப்பானில் அரிசி விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளதால் மக்கள் அங்கு கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

வரலாறு காணாத வெயிலால் அரிசி வரத்து பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் வாங்கி குவித்து வருகின்றனர்

எனவே, அதைச் சமாளிக்க ஜப்பானிய அரசாங்கம் 210,000 டன் அரிசியை அவசரகால இருப்புகளிலிருந்து சந்தைக்குக் கொண்டுவருகிறது.

ஜப்பானில் கடந்த சில மாதங்களாகவே அரிசியின் விலை 50 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

இது மக்களின் வாழ்க்கையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

எனவே அரசானது அதன் அவசரகால இருப்பிலிருந்து சந்தைக்கு அரிசி வழங்க முடிவு செய்துள்ளது.

5 கிலோ அரிசியின் சராசரி விலை தற்போது 24 டாலர் (32 வெள்ளி) என்று அரசாங்க கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு இது 13 டாலராக (17 வெள்ளி) இருந்தது குறிப்பிடத்தக்கது.