கிடு கிடுவென உச்சத்தைத் தொடும் தங்கத்தின் விலை!!

இஸ்ரேலுக்கும், ஹமாஸீக்கும் இடையிலான போர்,இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான மோதல், ஈரானில் போர் ஏற்படக்கூடும் என்ற அச்சம் போன்ற காரணங்களால் அதன் தாக்கம் வர்த்தக சந்தைகளைப் பாதித்துள்ளன.

தங்கத்தின் விலை இதுவரை இல்லாத கண்டிராத அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ளது.தங்கத்தின் விலை 2,700 டாலருக்கும்(சுமார் 3500 வெள்ளி) மேல் அதிகமாக உயர்ந்துள்ளது.

ஆசிய சந்தைகளில் தங்க விலை 2704.89 டாலரை தொட்டுள்ளது.அக்டோபர் 17-ஆம் தேதி (நேற்று) 2,688.83 டாலராகப் பதிவானது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இன்று வரை தங்கத்தின் விலை சுமார் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கான மத்திய வங்கிகள் எடுத்த முடிவு காரணமாக தங்கம் கவர்ச்சிகரமான சொத்தாக கருதப்படுகிறது.