நல்லடக்கம் செய்யப்பட்டார் போப் ஆண்டவர்..!!!வத்திகனில் திரண்ட 400,000 மக்கள் கூட்டம்…!!

நல்லடக்கம் செய்யப்பட்டார் போப் ஆண்டவர்..!!!வத்திகனில் திரண்ட 400,000 மக்கள் கூட்டம்...!!

வத்திகனில் போப் ஆண்டவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

1.4 பில்லியன் கத்தோலிக்கர்களை வழிநடத்தும் லத்தீன் அமெரிக்காவிலிருந்து வந்த முதல் போப் இவர்தான்.

88 வயதான போப் இந்த மாதம் 21 ஆம் தேதி காலமானார்.

செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்திலும் ரோம் வீதிகளிலும் 400,000 பேர் கூடியதாக வத்திக்கன் தெரிவித்துள்ளது.

அர்ஜென்டினாவில் பிறந்த போப்,தனது இறுதிச் சடங்கு எந்தவிதமான அலங்காரங்களும் இல்லாமல் எளிமையான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பொது மக்களின் நலனை நாடி, திறந்த மனதுடன் சேவை செய்த ஒருவராக அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.