பீட்ஸாவை டெலிவரி செய்த போலீஸ் அதிகாரி...!!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஒரு போலீஸ் அதிகாரி பீட்ஸாவை டெலிவரி செய்துள்ளார்.
போலீஸ் அதிகாரியை பீட்ஸா டெலிவரி செய்யுமாறு டெலிவரி ஊழியர் கூறியுள்ளார்.
இதற்கு காரணம் ஒரு முதலை என்று கூறப்படுகிறது.
பீட்ஸாவை டெலிவரி செய்ய டெலிவரி ஊழியர் வாடிக்கையாளரின் வீட்டிற்குச் சென்றார்.
ஆனால் முன் வாசலுக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த காரின் அடியில் ஒரு முதலை இருந்தது.
டெலிவரி ஊழியர் 4 மீட்டர் நீளமுள்ள முதலையைப் பார்த்து பயந்துள்ளார்.
அந்தப் பகுதியில் முதலை ஒன்று சுற்றித் திரிவதாக தகவல் கிடைத்ததை அடுத்து, போலீசார் ஏற்கனவே அக்கம் பக்கத்தில் இருந்தனர்.
“நீங்களே இதை வாடிக்கையாளரிடம் கொடுத்து விடுங்கள்” என்று டெலிவரி ஊழியர் பீட்ஸாவை அதிகாரியிடம் கொடுத்தார்.
வாடிக்கையாளர் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்த பிறகு, அதிகாரி பீட்ஸாவை வாடிக்கையாளரிடம் கொடுத்தார்.
அந்த முதலையால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் பின்னர் அது பத்திரமாக வேறு இடத்தில் விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
Follow us on : click here