ஐ.பி.எல்-43 வது தொடர் லீக் போட்டி நடைபெற்று வருகிறது.நேற்று பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் மோதியது.
லக்னோ அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியது.
இப்போட்டி நடந்து கொண்டிருக்கும்போதே , லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக்கிற்கும், விராட் கோலிக்கும் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டது.
அதோடு, ஒவ்வொரு விக்கெட் எடுக்கும் போதும் விராட் கோலி அதனை ஆக்ரோஷமாக கொண்டாடினார்.
போட்டி முடிந்த பிறகு, பெங்களூரு அணி வீரர் விராட் கோலிக்கும் , லக்னோ அணி வீரர் கம்பீருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதத்தை மேலும் செல்ல விடாமல் அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தினர்.இச்சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
விதிமுறையை மீறி நடந்து கொண்டதால் இருவருக்கும் IPL நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
விராட் கோலியின் போட்டி கட்டணத்திலிருந்து 100 சதவீதமும், அதே போல் கம்பீரின் போட்டி கட்டணத்திலிருந்து 100 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக்கிற்கு போட்டி கட்டணத்திலிருந்து 50 சதவீதம் அபராதம் விதித்துள்ளது.
விதிகளை மீறி நடந்து கொண்டதால் அந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்தது.