அமெரிக்காவில் உள்ள தனியார் விமானம் நிறுவனம் ஒன்று வட கரோலினா மாநிலத்தில் இருந்து ப்ளோரிடா மாநிலத்திற்கு செல்லும் வழியில், காற்றின் அழுத்தத்தால் திடீரென குலுங்கியது. சம்பவம் நடந்த விமானத்தில் 179 பயணிகளும், ஆறு விமான பணியாளர்களும் இருந்ததாக தெரிகின்றது.
இது குறித்து அந்த விமானத்தில் பயணித்த பயணிகள் கூறும் பொழுது, விமானமானது திரைப்படத்தில் வருவது போல் பயங்கரமாக அங்கும் இங்கும் சாய்ந்து அதிர்வுக்கு உள்ளாகியது என்று கூறினார். மேலும் ஏற்ற, இறக்கத்துடன் வேகமாக குலுங்கியது என்று கூறினார். இது உண்மையிலேயே திரைப்படத்தில் வருவது போல் இருந்தது என்று ஒருவர் கூறினார்.
மேலும் விமானத்தில் இருந்த பயணி ஒருவர் பறந்து வந்து அரை வினாடிக்கு பின்னர் தரையில் விழுந்ததால் அந்த பெண்ணின் காலில் பயங்கரமான காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவத்தின் போது பாத்ரூமில் இருந்த ஒரு பையனுக்கு தலையில் அடிபட்டு, புருவத்தில் ரத்தம் வழிந்ததாக தெரிகின்றது.
எனினும் அதிர்ஷ்டவசமாக விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. அதன் பின்னர் இரண்டு பயணிகள் மற்றும் இரண்டு விமான பணிப்பெண்கள் உட்பட நான்கு பேருக்கு உடனடியாக விமான நிலையத்தில் உள்ள மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இவ்வளவு போராட்டங்கள் இருந்தாலும் விமானம் பத்திரமாக தரையிறங்கியது அனைவருக்கும் ஆறுதலாக இருந்தது.