சிங்கப்பூர் – சியான் TR 134 விமானத்தில் பயணித்த ஒரு சில பயணிகள் தங்களின் லக்கேஜ்கள் இல்லாமல் சீனாவிற்கு வந்தடைந்தனர்.அவர்களின் லக்கேஜ்கள் மோசமான வானிலை காரணமாக அகற்ற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானதாக விமான நிறுவனம் கூறியது.
இச்சம்பவம் செப்டம்பர் 15-ஆம் தேதி சனிக்கிழமை நடந்தது.
செப்டம்பர் 14-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று மாலை சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையத்தில் இருந்து TR 134 விமானம் புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அது சுமார் 35 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது.
பலத்த காற்று வீசியதால் விமானப் புறப்படுவதற்கு முன் சில பயணிகளின் லக்கேஜ்கள் இறக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக CNA- விடம் கூறியது.
சியானை வந்தடைந்தவுடன் பாதிக்கப்பட்ட பயணிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
சனிக்கிழமை (இன்று) இரவு 7.10 மணிக்கு புறப்பட உள்ள TR 134 விமானத்தில் லக்கேஜ்கள் வந்தடையும் என்று ஸ்கூட் நிறுவனம் கூறியது.
இந்த சம்பவத்தால் எத்தனை பயணிகள் பாதிக்கப்பட்டனர் என்ற தகவல்களை வெளியிடவில்லை.
இந்த சம்பவத்திற்காக பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுகொண்டது.பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு நாங்கள் தொடர்ந்து உதவுவோம் என்று ஸ்கூட் விமான நிறுவனம் கூறியது.