சிங்கப்பூரின் Boon Lay சந்தையில் ஒருவர் மலைப்பாம்பை துன்புறுத்தி கொன்றுள்ளார்.
இந்த வீடியோ ஏப்ரல் மாதம் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.அதில் சில நபர்கள் பாம்பை துன்புறுத்தும் காட்சிகளும், அதனை கொன்ற காட்சியும் இடம்பெற்றிருக்கும்.
இந்த சம்பவம் குறித்து விலங்குநல அமைப்பான ACRES கவனத்திற்கு சென்றது.
அதனையடுத்து தேசிய பூங்கா வாரியம் அந்த நபருக்கு 1000 சிங்கப்பூர் டாலர் அபராதம் விதித்தது.வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் பாம்புகளை பார்த்தால், பொதுமக்கள் 24 மணி நேர Animal Response Centre-க்கு தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், பாம்பை அணுகவோ அல்லது கையாள முயற்சி செய்யவோ வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
தேசிய பூங்கா வாரியத்தின் அனுமதியின்றி வனவிலங்குகளை கொன்றால் 10,000 சிங்கப்பூர் டாலர் அபராதமோ, 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது.இது முதல்முறை குற்றம் செய்பவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனை ஆகும்.