பென்ஸ் கார் வாங்கி தருவதாக ஏமாற்றிய நபர்!!

சிங்கப்பூரில், 48 வயதான Tai என்ற மெக்கானிக், 43 வயதான நபர் ஒருவரை ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

அவரது இந்த மோசடி குற்றத்திற்காக எட்டு மாதச் சிறைத்தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது.

மேலும் Tai என்பவர் பாதிக்கப்பட்டவரிடம் Mercedes-Benz காரை S$140,000க்கு வாங்கலாம் என்று கூறி நிர்வாக கட்டணம் போன்ற கூடுதல் கட்டணங்களுக்காக மொத்தம் S$22,487ஐ வாங்கி ஏமாற்றி உள்ளார்.அதில் உரிமை சான்றிதழ் கட்டணத்துக்காகவும் (COE) சேர்த்து வாங்கியுள்ளார்.

2019 ஆம் ஆண்டில் Tai மற்றும் பாதிக்கப்பட்டவர் இருவரும் நண்பரானார்கள் .

அந்த சமயத்தில் பாதிக்கப்பட்டவர் சொத்தில் முதலீடு செய்ய எண்ணினார்.

ஆனால் Tai, அவரது நிறுவனம் மூலம் விலை குறைவான பென்ஸ் காரை வாங்கி தருவதில் தான் உதவுவதாக அவரை ஏமாற்றினார்.

பாதிக்கப்பட்டவர் முதலில் இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டவில்லை.

ஆனால் பாதிக்கப்பட்டவர் ஒப்புக்கொள்ள வற்புறுத்தினார்.

2020 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை Tai-ன் வங்கி கணக்கிற்கு பணம் அவர் அனுப்பி உள்ளார்.அவர் 22 முறை பணம் அனுப்பி உள்ளார்.

ஆனால் பாதிக்கப்பட்ட நபருக்கு கார் கிடைக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர் 2022 ஆம் ஆண்டு காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

காவல்துறையினரால் இந்த ஆண்டு மே மாதம் Tai கைது செய்யப்பட்டார்.

இது போன்ற மோசடி குற்றங்களுக்கு பத்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.