கடந்த மார்ச் 9-ஆம் தேதி ஜொகூர் பாலத்தில் உள்ள ரயில் தண்டவாளத்தில் நடந்தே வந்து சிங்கப்பூருக்குள் பங்களாதேஷை சேர்ந்த நபர் நுழைய முயன்றுள்ளார்.
அவர் சட்ட விரோதமாக நுழைய முயன்றதால் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் கைது செய்தது.
கைது செய்யப்பட்டவரிடம் எந்த ஒரு அடையாள ஆவணங்களும், பயண ஆவணங்களும் இல்லை என்று ஆணையம் மார்ச் 14-ஆம் தேதி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டதில் குறிப்பிட்டு இருந்தது.
சிங்கப்பூருக்குள் சட்ட விரோதமான முறையில் நுழைவதையும், வெளியேறுவதையும் கடுமையாக கருதுகிறதாக ஆணையம் குறிப்பிட்டது.
இவ்வாறு செய்பவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 1000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்.6 மாதங்களுக்கு மேல் போகாத சிறை விதிக்கப்படலாம். அல்லது இவ்விரண்டும் விதிக்கப்படலாம்.
கடந்த 2022-ஆம் ஆண்டு சட்ட விரோதமாக குடியேறிய 57 பேர் கைதுச் செய்யப்பட்டனர் என்று ஆணையம் குறிப்பிட்டது.
அதேபோல் 2021-ஆம் ஆண்டில் 56 ஆக பதிவாகி உள்ளதாக கூறியது.