கடந்த மாதம் ஆண்டு அடிப்படையில் 5.5 விழுக்காட்டைச் சிங்கப்பூரின் அடிப்படை பணவீக்கம் எட்டியுள்ளது.
இது 2008-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு இப்படி ஒரு உச்சத்தை எட்டியுள்ளது.கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு உச்சத்தை எட்டியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்துடன் இந்த ஆண்டு அடிப்படையின் விழுக்காட்டை ஒப்பிடும்பொழுது 0.4 விழுக்காடு அதிகரித்துள்ளது.
அடிப்படை பணவீக்கத்தின் விழுக்காட்டின் விகிதம் பொருள், சேவை வரி உயர்ந்ததாலும் , சேவை,உணவு, சில்லறைப் பொருட்கள் போன்றவற்றின் விலைவாசி உயர்வு காரணமாகும் சென்ற மாதம் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக சிங்கப்பூர் நாணய வாரியமும், வர்த்தகத் தொழில் அமைச்சகமும் தெரிவித்தது.
முதல் காலாண்டிலும் அடிப்படைப் பணவீக்கத்தின் விழுக்காடு தொடர்ச்சியாக 5 விழுக்காட்டிற்கு மேல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறதாக தெரிவித்தது.
உள்நாட்டில் அடுத்து வரும் சில காலத்துக்கு ஊழியர்கள் செலவும்,சம்பள வளர்ச்சியும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியது.