தனது நாயின் காயத்தைக் கண்டுக்கொள்ளாமல் சிகிச்சை அளிக்காமல் இருந்த உரிமையாளர்!! இப்படியும் சிலர்!!

தனது நாயின் காயத்தைக் கண்டுக்கொள்ளாமல் சிகிச்சை அளிக்காமல் இருந்த உரிமையாளர்!! இப்படியும் சிலர்!!

சிங்கப்பூரில் 61 வயதுடைய கோர் லியான் ஹீவாட்டு என்பவர் நாயை துன்புறுத்தியதற்காக அபராதம் வழங்கப்பட்டுள்ளது. அவர் வளர்க்கும் நாயின் கால்விரலில் காயம் ஏற்பட்டது. அதை அவர் சரியாக கவனிக்காததோடு அதற்கான சிகிச்சை ஏதும் செய்யாததால் புழு, பூச்சிகள் மொய்க்க ஆரம்பித்தது.

இந்த குற்றத்திற்காக அவருக்கு ஒரு ஆண்டு வரை எந்த செல்லப் பிராணிகளும் வளர்க்கக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் $4500 சிங்கப்பூர் டாலர் அபராதமும் வழங்கப்பட்டுள்ளது.

Save our street dogs அமைப்பு அவரிடமிருந்து நாயை மீட்டது.

நாயின் காயம் மிக மோசமாக இருப்பதை அறிந்த விலங்குநல மருத்துவர் நாயின் கால் விரலை துண்டிக்க வேண்டும் என்று மருத்துவர் கூறினார்.

மருத்துவமனையில் 10 நாட்கள் சிகிச்சை பெற்ற பிறகு முழுமையாக குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது..

முன்னதாக கோருக்கு 1,000 வெள்ளி அபராதம் முதலில் விதிக்கப்பட்டது. ஆனால் அவர் அதனை கட்ட தவறினார். அவருக்கு 4 முறை நினைவூட்டியும் அவர் செலுத்த தவறினார் என்பது குறிப்பிடத்தக்கது.