குடியிருப்பை தங்கும் விடுதியாக மாற்றிய முதியவர்!! வெளிநாட்டு ஊழியர்களுக்கு வாடகைக்கு விட்டு லாபம் பார்த்தது அம்பலம்!!
சிங்கப்பூர் : 72 வயதுடைய முதியவர் 11 தனியார் குடியிருப்புகளை அங்கீகரிக்கப்படாத தங்கும் விடுதியாக மாற்றி அவற்றை வெளிநாட்டு ஊழியர்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.
மேலும் ஒரு யூனிட்டில் 23 வெளிநாட்டவர்கள் தங்கியுள்ளனர்.
முறையான உரிமம் பெறாமல் தங்கும் விடுதிகளை நடத்தி வந்ததால் அவருக்கு $600,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 2016 மற்றும் ஏப்ரல் 2018 இடையே சோதனை நடவடிக்கையை MOM – யின் அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்டனர்.
அதில் சுகாதாரமற்ற நிலையில் ஊழியர்களை அதிகமாக தங்க வைத்திருப்பதும், சமையலறை மற்றும் கழிப்பறையில் தரை மற்றும் சுவர்கள் அழுக்கு படிந்து, கறைகள் அதிகமாக இருப்பதும் தெரிய வந்தது.
அவர் மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வார்.
ஜூன் 14-ஆம் தேதி நகரப்புற சீரமைப்பு ஆணையம் ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
டான் ஆக்கிரமிப்பு வரம்பு விதிகளை மீறியுள்ளதாக தெரிவித்துள்ளது.
டான் ஒரு பிளாட் 15 – ஐ அறைகளாக பிரித்து ஒரு அறைக்கு சுமார் $500 மற்றும் இரண்டு பேர் தங்கும் அறைக்கு $550 என இரண்டு வருடங்கள் அவர் வாடகை வாங்கியதாக விசாரணைகள் மூலம் தெரியவந்தது. இதுபோன்ற நிறைய குடியிருப்பு இடங்களை வாடகைக்கு விட்டது விசாரணைகள் மூலம் தெரிய வந்தது.
விதிமுறைகளைப் பற்றி அறிந்தும் இத்தகைய குற்றங்களை டான் புரிந்துள்ளார்.
அங்கீகரிக்கப்படாத தங்கும் விடுதிகளில் ஆட்களை அதிகமாக தங்க வைப்பதினால் பக்கத்தில் உள்ள குடியிருப்பு தன்மை மோசமாக பாதிக்கின்றது. இதுபோன்ற சட்ட விதிகளை மீறுகின்றவர்களுக்கு URA அமலாக்கத்தில் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று URA யின் டெவலப்மெண்ட் கன்ட்ரோல் குழுமத்தின் இயக்குனர் திரு. மார்ட்டின் டான் கூறினார்.
Follow us on : click here