சீனாவைச் சேர்ந்த நபரின் தொண்டைக் குழாயில் சிக்கியிருந்த பொருள்…!!!

சீனாவைச் சேர்ந்த நபரின் தொண்டைக் குழாயில் சிக்கியிருந்த பொருள்...!!!

சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தவறுதலாக 9 செ.மீ லைட்டரை விழுங்கியதால் கடுமையான வயிற்று வலிக்கு ஆளாகியுள்ளார்.

அவசர சிகிச்சைக்காக கடந்த புதன்கிழமை (டிசம்பர் 11) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது மார்பு பகுதியில் எடுக்கப்பட்ட எக்ஸ்ரே மூலம் அவரது தொண்டைக் குழாயில் லைட்டர் போன்ற பொருள் தென்பட்டது.

பிறகு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் மூலம் அவரது முன்பற்களில் இருந்து சுமார் 35 சென்டிமீட்டர் தொலைவில் அவரது தொண்டைக் குழாயில் லைட்டர் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

குறுகிய தொண்டைக் குழாயிலிருந்து லைட்டரை வெளியே எடுக்க மருத்துவர் சிரமப்பட்டார்.

எனினும் மிகுந்த கவனத்துடனும் பொறுமையுடனும் மருத்துவர் தொண்டைக் குழாயிலிருந்து இருந்து லைட்டரை அகற்றினார்.

அகற்றப்பட்ட லைட்டர் 9 செ.மீ நீளமும் 2.5 செ.மீ அகலமும் கொண்டதாக இருந்தது.

லைட்டரை நீக்கிய பிறகு அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.