சிங்கப்பூரில் இளம் வயது மறதி நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு…!!

சிங்கப்பூரில் இளம் வயது மறதி நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு...!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இளம் வயதிலேயே டிமென்ஷியா எனும் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் 5 மடங்கு அதிகரித்துள்ளது.

இந்தத் தகவலை தேசிய நரம்பியல் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் சிங்கப்பூரில் மறதி நோயால் பாதிக்கப்படுபவரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

40 வயதிற்குட்பட்டவர்களும் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

2013 ஆம் ஆண்டில், இதுபோன்ற 60 சம்பவங்கள் கண்டறியப்பட்டன.

சிங்கப்பூரில் மொத்தம் 4,000 பேருக்கு இளம் வயதிலேயே டிமென்ஷியா இருக்கலாம் என்று நரம்பியல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிமென்ஷியா சிங்கப்பூர் நடத்திய மற்றொரு ஆய்வில், பங்கேற்பாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நோய் தொடர்பான அறிகுறிகள் கண்டறியப்பட்டால் அவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.

ஆனால், சிகிச்சை செலவு மற்றும் நோய் தாக்குதல் இருக்கலாமோ என்ற அச்சம் காரணமாக பலர் பரிசோதனை செய்ய தயங்குவதாக தெரிவித்தனர்.