சிங்கப்பூரில் அதிகரித்துவரும் செல்வந்தர்களின் எண்ணிக்கை...!!
சிங்கப்பூர்:சுவிட்சர்லாந்தின் UBS வங்கிக்கு வெளியிட்ட அறிக்கையில்,சிங்கப்பூரில் இருக்கும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு (2024) 47 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு (2023) இந்த எண்ணிக்கையானது 41 ஆக இருந்தது.
அந்த 47 செல்வந்தர்களின் மொத்த சொத்து மதிப்பானது சுமார் 208.6 பில்லியன் வெள்ளி என்று கூறப்படுகிறது.
2023 இல்,அந்த எண்ணிக்கையானது 182.1 பில்லியன் வெள்ளியாக இருந்தது.
சிங்கப்பூரின் பெரும் பணக்காரர்களில் 66 சதவீதம் பேர் சுயதொழில் செய்பவர்கள் என்று அறிக்கை கூறியது.
ஆனால் அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை.
சிங்கப்பூருக்கு பணக்காரர்கள் இடம் பெயர்ந்ததால் இந்த எண்ணிக்கையானது அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
பணக்காரர்கள் தங்கள் முதலீடுகளை விரிவாக்க சிங்கப்பூர் தவிர மற்ற நாடுகளின் மீதும் கவனம் செலுத்துகின்றனர்.
அவர்கள் சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்காவிற்கும் குடிபெயர்கின்றனர்.
Follow us on : click here