Singapore News in Tamil

சிங்கப்பூரில் ஊழியர்கள் வேலை இழக்கும் நிலை அதிகரித்துள்ளது! ஆட்குறைப்பை அதிகரித்துள்ள நிறுவனங்கள்!

சிங்கப்பூரின் வேலைச் சந்தையில் மந்தமான நிலை தோன்றுகிறது. கட்டுமானம், சேவை துறைகளில் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்வது அதிகரித்துள்ளது.

உலகில் நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. இதனால் வேலைச் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாண்டின் முதல் காலாண்டில் இல்ல பணிப்பெண்களைத் தவிர்த்து ஒட்டு மொத்த வேலைகளின் எண்ணிக்கை 34,500 ஆக உயர்ந்திருக்கிறது.

தொடர்ந்து ஆறாவது காலாண்டில் வேலை அதிகரித்துள்ளது.

ஆனால்,அது மெதுவடைந்து வருகிறது.

தொடர்ந்து மூன்றாவது காலாண்டு ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் போக்கும் அதிகரித்துள்ளது.

2016,2017 – ஆம் ஆண்டுகளில் இருந்தது போல் முதல் காலாண்டில் 4000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

தகவல் தொழில்நுட்பம், நிபுணத்துவ சேவை, மின்னியல் உற்பத்தி போன்ற துறைகள் மோசமாக பாதிக்கப்பட்டன.

தொழில் துறை நலிவும், வர்த்தக சீரமைப்பும் அதற்கு காரணம் என்று மனிதவள அமைச்சகம் கூறுகிறது.

உற்பத்தி குறிப்பாக மின்னியல் துறை தொடர்ந்து நெருக்கடியைச் சந்திக்கலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.

வேலை சந்தையில் மெதுவடைவதற்கான அறிகுறி தென்படும் நேரத்தில் வேலையின்மை விகிதம் தொடர்ந்து குறைவாகவே இருக்கிறது.

ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் போக்கு அதிகரித்தாலும், நிறுவனங்கள் தொடர்ந்து ஆட்களை வேலைக்கு சேர்க்கின்றனர்.

ஊழியர்களும், நிறுவனங்களும் அரசாங்க திட்டங்களை பயன்படுத்தி அவர்களின் திறன்களை காலத்திற்கேற்ப மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மனிதவள அமைச்சகம் கூறியது.