சிங்கப்பூரில் தனியாக வசிக்கும் முதியவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது!!

சிங்கப்பூரில் தனியாக வசிக்கும் முதியவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது!!

சிங்கப்பூர்:சிங்கப்பூர் அரசானது மூத்த குடிமக்களின் நலன்களில் அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் வட்டார பகுதிகளிலேயே மருத்துவ சேவை, இலவச பேருந்து சேவை,மூத்த குடிமக்கள் உரிமைத்தொகை,மருத்துவ காப்பீடு, வெள்ளிச் சலுகை அட்டை என பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது.

அந்த வகையில் சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சிங்கப்பூரில் தனியாக வசிக்கும் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சிங்கப்பூரில் 2013 இல், 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய முதியவர்கள் 35,000 க்கும் அதிகமானோர் தனியாக வாழ்ந்து வருவதாக கூறியது.

கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்து 78,000 ஆக இருந்தது.

தனியாக வாழும் முதியவர்களில் 83 சதவீதம் பேர் மளிகைக் கடைக்குச் செல்வது போன்ற சிறிய பணிகளுக்கு குடும்ப உறுப்பினர்களின் உதவியை நாடுவதாகக் கூறியுள்ளனர்.

 

Follow us on : click here ⬇️