தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகளுக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை குறைவு!

தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகளுக்காக (BTO) விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதன் நிலைப்பட்டு வருவதாகவும் நேற்று வீடமைப்பு வளர்ச்சி கழகம் கூறியுள்ளது.

கடந்த மாதம் இந்த திட்டத்தின்கீழ் கிட்டத்தட்ட 4,400 க்கும் அதிகமான வீடுகளைக் கழகம் அறிமுகம் செய்தது. ஆக குறைவான குடும்பங்கள் கடந்த மாதம் தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகளுக்காக விண்ணப்பித்தனர்.

இதனை 2020-ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டு பார்த்தால் அதன் விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதுவே முதல் முறை. இவ்வாறு வீடமைப்பு வளர்ச்சி கழகம் குறிப்பிட்டது.