இன்று புதிதாக திறக்கப்படும் பொங்கோல் கோஸ்ட் நிலையம்…!!!!

இன்று புதிதாக திறக்கப்படும் பொங்கோல் கோஸ்ட் நிலையம்...!!!!

சிங்கப்பூர்:வடகிழக்கு ரயில்வேயின் பொங்கோல் கோஸ்ட் நிலையம் இன்று (டிசம்பர் 10) திறக்கப்படுகிறது.

பயணிகள் இந்த சேவையை பிற்பகல் 3 மணி முதல் பயன்படுத்த முடியும் என தரைவழி போக்குவரத்து ஆணையம் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

புதிய நிலையம் பொங்கோல் மின் மண்டலத்தின் நடுவில் அமைந்துள்ளது.

அங்கு 300க்கும் மேற்பட்ட சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்படும் அளவிற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிதாக திறக்கப்படும் ரயில் நிலையம் உட்பட, வடகிழக்கு ரயில்வே பாதையானது 17 நிலையங்களைக் கொண்டிருக்கும்.

JTC வணிகப் பூங்கா மற்றும் சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம் ஆகியவை அருகிலேயே அமைந்துள்ளது.

பொங்கோல் கோஸ்ட் பேருந்து நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் ரயில் நிலையம் உள்ளது.

சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் இனி ரயில் பாதையை அடைவது சுலபமாகும்.

வடகிழக்கு ரயில் பாதை அமைந்துள்ள பகுதிகளில் வசிக்கும் 200,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 10 நிமிட நடைப்பயணத்தில் ஒரு நிலையத்தை அடையலாம்.