சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வரும் புதிய நடைமுறை!!

சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வரும் புதிய நடைமுறை!!

சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு (2025) பிப்ரவரி மாதம் முதல் அனைத்து வாகனப் பிரிவுகளிலும் கூடுதலாக 20000 வாகன உரிமைச் சான்றிதழ்கள் வரை சேர்க்கப்படுகின்றன.

அடுத்த சில ஆண்டுகளில் கட்டங்கட்டமாக புதிய வாகன உரிமைச் சான்றிதழ்கள் அறிமுகமாகும். இதனை நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

சிங்கப்பூரில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.

புதிய மெய்நிகர் ERP நுழைவாயில்களை புதிய கட்டமைப்பின்கீழ் நிலப் போக்குவரத்து ஆணையம் அறிமுகப்படுத்தும்.

போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக ERP 2.0 நுழைவாயில்கள் வரவுள்ளது.

இந்த நிலையில் இந்த புதிய அறிவிப்பு வந்துள்ளது.

அனைத்து சிங்கப்பூர் வாகனங்களிலும் ERP 2.0 சாதனங்கள் பொருத்தப்பட்டவுடன் அந்த மெய்நிகர் அம்சங்கள் செயல்படுத்தப்படும்.

அந்த சாதனங்கள் 2026 ஆம் ஆண்டிற்குள் பொருத்துவதே இலக்கு என்று தெரிவிக்கப்பட்டது.