சிங்கப்பூரில் நாளை முதல் அமலுக்கு வரும் புதிய நடைமுறை!!

சிங்கப்பூரில் நாளை முதல் அமலுக்கு வரும் புதிய நடைமுறை!!

சிங்கப்பூரில் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழக வீடுகளில் பூனைகளை வளர்க்கலாம்.பூனையை வைத்துக் கொள்ள உரிமம் பெறும் திட்டம் செப்டம்பர் 1-ஆம் தேதி(நாளை) அமலுக்கு வருகிறது.

பூனைகளுக்கு மைக்ரோசிப் பொருத்த, உரிமம் பெற நாளை முதல் இரண்டு ஆண்டுகள் அவகாசம் வழங்கப்படுகிறது.

கழக வீட்டில் வசிப்பவர்கள் அனுமதிக்கப்படும் வகையைச் சேர்ந்த ஒரு நாயையும், இரண்டு பூனைகளையும் வளர்க்கலாம்.

தனியார் வீட்டில் வசிப்பவர்கள் மூன்று பூனை அல்லது நாய் வளர்க்கலாம். அல்லது இரண்டையும் சேர்ந்த மூன்று செல்லப் பிராணிகளை வைத்திருக்கலாம்.

இது குறித்து வீடமைப்பு வளர்ச்சி கழகம் மற்றும் விலங்குநல மருத்துவ சேவை ஆகஸ்ட் 31-ஆம் தேதி(இன்று) அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

முதல்முறை பூனை அல்லது நாய் வளர்க்க உரிமம் பெற விண்ணப்பிப்பவர்கள் இலவச ஆன்லைன் செல்லப்பிராணி பராமரிப்பு பயிற்சி பெற வேண்டும்.

 

Follow us on : click here ⬇️