சிங்கப்பூரில் நீடித்த நிலைத்தன்மை,சுற்றுப்புற அமைச்சகத்தின் சந்தை, உணவகங்களில் சேவைப் பராமரிப்பு கட்டணங்கள் அதிகப்படுத்தபடுகின்றன
27 நிலையங்களின் கட்டண உயர்வு 2 கட்டங்களாக அமல்படுத்தப்படும்.அடுத்த ஆண்டு ஜனவரியிலும்,ஜூலையிலும் சேவைப் பராமரிப்பு கட்டணங்கள் உயர்த்தப்படும்.
சமைத்த உணவுக் கடைகளுக்கான சேவைப் பராமரிப்பு கட்டணம் 25 விழுக்காடு உயரும்.
தற்போது,140 வெள்ளி செலுத்துகிறார்கள்.
கட்டணம் ஜனவரி மாதத்தில் 155 வெள்ளிக்கும்,ஜூலையில் 175 வெள்ளிக்கும் கூடும்.
மற்ற கடைகளில் 10 முதல் 20 வெள்ளி வரை வசூலிக்கப்படும்.
துப்புரவு பணிகள்,பொது பயன்பாட்டு சேவைகள் போன்ற செலவுகளுக்கு சேவைப் பராமரிப்பு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
உணவகங்கள் மற்றும் சந்தைகளின் சுத்தம் மற்றும் பராமரிப்பு செலவுகள் காலப்போக்கில் கணிசமாக கூடுவதாக தேசிய சுற்றுப்புற அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2005 -ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை வசூலிக்கப்படும் கட்டணங்கள் மாற்றப்படவில்லை என்று அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.