சிங்கப்பூரில் பொது மக்களிடம் மறுசுழற்சி முறை அதிகம் உணரப்பட்டு வருவதாக மின்கழிவுகளைச் சேகரிக்க உரிமம் பெற்ற ALBA E-WASTE நிறுவனம் தெரிவித்தது.
சிங்கப்பூரில் மின்கழிவுகளைச் சேகரித்த ஒரே நிறுவனம் இது.மறுபயன்பாட்டின் அவசியத்தைப் பொதுமக்கள் பெரிதும் உணர்ந்துவிட்டார்கள்.
அதில் குறிப்பாக பெரும்பாலானோர் மின்கழிவுகளை மறுசுழற்சி செய்கின்றனர்.
நிறுவனம் சேகரித்த மின்கழிவுகளின் எடை 480 டன்னுக்கும் அதிகமாக கிடைத்தது.இந்த கழிவுகள் 2021-ஆம் ஆண்டு ஜூலையிலிருந்து கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் வரை சேகரித்ததாகும்.
கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலையிலிருந்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை மொத்தம் 340 டன் மின்கழிவுகள் கிடைத்தது. அதாவது 6 மாதங்களில் இதனை டன்கள் கிடைத்ததாக கூறியது.
சேகரிக்கப் பட்ட இவை அனைத்து பொருட்களும் புத்துயிர் பெறும் என்றும் தெரிவித்தது.
இதில் மின்கலன்கள்,மடிக்கணினிகள் எனப் பல வகைக் கழிவுகள் கிடைத்துள்ளது.
இவைகள் மூலப்பொருட்களாக கூடிய விரைவில் மாற்றப்படும்.
தீவெங்கும் ALBA நிறுவனம் 620க்கும் அதிகமான மின்கழிவுகளுக்கான தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.
அவற்றில் போடப்படும் பொருட்கள் மாதந்தோறும் அவற்றின் அளவு கூடிக்கொண்டே போவதாகவும் தெரிவித்தது.
மறுசுழற்சி முறைப் பழக்கத்தை அதிகப்படுத்த அதற்காக கூடுதல் தொட்டிகள் வைக்கத் திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்தது.