சிங்கப்பூரின் தேசிய கொடியை இப்படியெல்லாம் பயன்படுத்தக்கூடாது…….

சிங்கப்பூர் தேசிய தினம் முடிந்து சில வாரங்களுக்கு மேலாகவே ஆகி விட்டது.ஆனால் இன்னும் சிங்கப்பூரின் தேசிய கொடியை ஆங்காங்கே காணலாம்.

இது குறித்து கலாச்சாரம், சமூகம் மற்றும் இளைஞர் அமைச்சகம் கூறியுள்ளது. சிங்கப்பூரர்களை தேசிய கொடியை காட்ட ஊக்குவிக்கப்படுவதாகவும்,அவர்கள் ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரை கொடியை காட்ட ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்றும் கூறியது.

சமூக வலைத்தளங்களில் கொடிகளின் படங்கள் பகிரப்பட்டு வருகிறது.ஒரு சில கொடிகளின் புகைப்படங்களில் கிட்டத்தட்ட ஐந்து கொடிகளின் நிறங்கள் மங்கிவிட்டது. அதோடு மூலைகளும் கிழிந்ததது போல் காட்சி அளித்தன.

இன்னொரு கொடியின் புகைப்படத்தில் கொடியில் உள்ள ஐந்து நட்சத்திரங்களில் இரண்டுக்கு இடையில் ஓர் பறவையின் எச்சங்கள் இருக்கின்றது.

தேசிய கொடி அழுக்காக இருக்கும் போது அதை சுத்தம் செய்ய வேண்டும் அல்லது மங்கிய நிலையில் காணப்பட்டாலோ,கிழிந்தாலோ மாற்ற வேண்டும் என்பது தேசிய மரபுரிமை வாரியத்தின் வழிகாட்டுதலின்படி தேசிய கொடியைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல் ஆகும்.