மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ், விஜய் கூட்டணி உருவாகி வரும் லியோ படம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் நட்சத்திர கூட்டமே சங்கமித்து நடித்து வருகின்றனர்.
இது மட்டுமல்லாமல் இப்படத்தில் 6,7 வில்லன்கள் இருப்பார்கள் என்றும் லோகேஷ் கூறி ரசிகர்களிடையே லியோ படத்தின் ஆர்வத்தைக் கூட்டினார். பயமுறுத்தியும் உள்ளார்.
ரசிகர்கள் லோகேஷின் மீது மிகுந்த எதிர்பார்ப்புகளை அதிகமாக வைத்துள்ளனர்.
ஏனென்றால்,கைதி, மாஸ்டர் போன்ற வெற்றிப் படங்களைத் தந்துள்ளார்.அதன்பின் விக்ரம் படத்தில் அதனைப் பூர்த்தி செய்வாரா என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவர்கள் நினைத்ததை விட வெற்றிகரமாக தந்தார்.
இதைப்போல் லியோ படத்திலும் புது விதமாக எடுத்து இருப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இதனால், இப்படத்தை வாங்க வேண்டும் என்று பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டு வந்தன.
மேலும் இந்த படத்தில் ப்ளடி ஸ்வீட் லியோ என்ற தலைப்புக்காகவே பல நூறு கோடிகள் வருமானம் வந்துள்ளது.
Free ரிலீசில் லியோ படம் 400 கோடியைத் தாண்டி உள்ளது.
இந்த படத்தின் ஓடிடி யை நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளது.
இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை சன் நெட்வொர்க் பெற்றுள்ளது.
இப்படத்தை தியேட்டர் உரிமைக்காக 175 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் மியூசிக் போன்றவைகள் 240 கோடிக்கு விற்பனையாகி இருக்கிறது.