திருமணம் குறித்த கவலையில் இருக்கும் பிரபல இசையமைப்பாளரின் தாய்...!!

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக பணியாற்றி வரும் அனிருத்துக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எனவே அவரது தாயார் லட்சுமி ரவிச்சந்திரன் அனிருத்தின் திருமணம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.
3 படத்தின் மூலம் அறிமுகமான அனிருத், தற்போது விஜய், ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தருவதில் பிஸியாக இருக்கிறார். அவர் தொட்டதெல்லாம் ஹிட் ஆகி வருவதால் கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக வலம் வருகிறார்.
இசையமைப்பாளர் அனிருத்துக்கு தற்போது 34 வயதாகிறது. இந்த வயதிலும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருக்கிறார். மேலும் இசையமைப்பாளர் அனிருத் ஏற்கனவே நடிகை ஆண்ட்ரியாவை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. பின்னர் அது பிரேக்-அப்பில் முடிந்ததாக தகவல் வெளிவந்தது.அதன்பிறகு நீண்ட நாட்களாகவே அனிருத் திருமணத்தை தள்ளிப்போட்டு வருகிறார்.இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அனிருத்தின் தாயார் லட்சுமி ரவிச்சந்திரன் தனது மகனின் திருமணம் குறித்து பேசினார்.
அவர் கூறியதாவது:கடவுள் அருளால் எவ்வளவு சீக்கிரம் திருமணம் நடக்கிறதோ, அவ்வளவு சீக்கிரம் அனிருத் திருமணம் நடைபெற வேண்டும். அனிருத்தின் மனதையும், நேரத்தையும் புரிந்து கொள்ளும் பெண் சீக்கிரம் கிடைக்க வேண்டும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு மன அமைதி மிகவும் அவசியம்.இன்னும் சொல்லப்போனால் நான் அவனை ஒரு குழந்தை போலத்தான் வளர்த்து வருகிறேன்.
அவன் மனம் கலங்கியது போல் நான் எதுவும் சொல்ல மாட்டேன். அனிருத்தின் ஸ்டுடியோவை நான் கவனித்து வருகிறேன். அவருடைய அட்டவணையை நான் பார்த்துக் கொள்கிறேன். அவனுடன் பணிபுரிந்தாலும் அவனின் சொந்த விஷயத்தில் தலையிடக்கூடாது என்று நினைப்பேன்.
அனிருத்துக்கு சீக்கிரம் ஒரு பெண் கிடைக்க வேண்டும் என்று அவரது தாயார் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் அனிருத்துக்கு இன்னும் பெண் கிடைக்கவில்லையா என்று ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர்.சிலர் அவருக்கு சீக்கிரம் மணப்பெண் கிடைக்க தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg