பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய தருணம்!! பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் லிட்டில் ஒலிம்பியன்!!
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் எகிப்திய வாட்போர் வீராங்கனை நாடா ஹபிஸ் (Nada Hafez) பங்கேற்றார்.
26 வயதுடைய நாடா ஹபிஸீக்கு இது 3 – வது ஒலிம்பிக் போட்டி.
பெண்களுக்கான வாட்போர் போட்டியில் 15-13 செட் கணக்கில் அமெரிக்கா வீராங்கனையை ஹபிஸ் தோற்கடித்தார்.இது அவரின் முதல் வெற்றி.
அதன் பின் ஹபிஸ் கடைசி 16 – வது சுற்றில் 7-15 என்ற செட் கணக்கில் தென்கொரிய வீராங்கனையிடம் தோல்வியுற்றார்.
ஏற்கனவே 2016,2021-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
7- மாத கர்ப்பமாக இருந்து கொண்டே போட்டியில் பங்கேற்றுள்ளது தமக்கு பெருமையாகப்
இருப்பதாக கூறினார். மேலும் ஆட்டத்தின் தரம் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.
அவர் 7 மாத கர்ப்பத்துடன் போட்டியில் கலந்து கொண்டது குறித்து கூறியது ரசிகர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
`போட்டி களத்தில் நீங்கள் பார்த்தது 2 பேர்தான்.ஆனால் அங்கிருந்தது 3 பேர்,நான்,என் சகப் போட்டியாளர், விரைவில் இந்த உலகத்துக்கு வரவிருக்கும் எனது குழந்தை!” என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Follow us on : click here