முகத்தை பொலிவாக்கும் தேங்காய் எண்ணெயின் அற்புதங்கள்…!!

முகத்தை பொலிவாக்கும் தேங்காய் எண்ணெயின் அற்புதங்கள்...!!

தேங்காய் எண்ணெய் என்பது பல வீடுகளில் பயன்படுத்தப்படும் ஒரு அத்தியாவசிய எண்ணெய்.தேங்காய் எண்ணெய் சமையலுக்கு மட்டுமின்றி முடி மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும் ஒரு முக்கியமான அழகுப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

தேங்காய் எண்ணெயால் சருமத்தில் நிகழும் அற்புதங்கள்…

👉 தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவுவது வெடிப்புகளையும், சரும வறட்சியையும் கட்டுப்படுத்த உதவும்.

👉 தேங்காய் எண்ணெயை தயிருடன் கலந்து சருமத்தில் தடவுவது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

👉 முகத்தைப் பளபளப்பாக்க விரும்புபவர்கள், தேங்காய் எண்ணெயை பாலுடன் கலந்து முகம் முழுவதும் தடவி நன்றாக மசாஜ் செய்து 20 நிமிடங்களுக்குப் பிறகு, முகத்தை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்தால் முகம் பளிச்சென மாறும்.

👉 முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், தழும்புகள் மற்றும் கருவளையங்களை மறைய தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம்.


👉 கண்களைச் சுற்றி அரிப்பு, கண் எரிச்சல், கண் சிவத்தல் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள், புருவங்கள் மற்றும் கண் இமைகளில் தேங்காய் எண்ணெயைத் தடவுவதன் மூலம் அந்தப் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

👉 தேங்காய் எண்ணெயைத் தொடர்ந்து பயன்படுத்துவது உங்கள் முகத்தைப் பளபளப்பாக்கும்.

👉 இறந்த சரும செல்களை அகற்ற தேங்காய் எண்ணெயைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்யலாம்.

👉 உங்கள் உதடுகள் வறண்டிருந்தால், அவற்றை மென்மையாக வைத்திருக்க தேங்காய் எண்ணெயால் செய்யப்பட்ட லிப் பாமை பயன்படுத்தலாம்.

👉 இரவில் முகத்தைக் கழுவி உலர்த்திய பிறகு, சிறிது தேங்காய் எண்ணெயைத் தடவி, மறுநாள் காலையில் முகத்தைக் கழுவினால் சருமம் பளபளப்பாக இருக்கும்.


யாரெல்லாம் தேங்காய் எண்ணெயை தவிர்க்க வேண்டும்..???

👉 எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

👉 அதிகப்படியான முகப்பரு உள்ளவர்கள் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

👉 வெயில் காலத்தில் சருமத்தில் அதிகமாக தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதால் முகப்பருக்கள் ஏற்படலாம்.

👉 முகத்தில் அதிகமாக முடி உள்ளவர்கள் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

இது போன்ற பிரச்சனை உள்ளவர்கள் தேங்காய் எண்ணெயை நேரடியாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக அதை கற்றாழை அல்லது மூலிகை கிரீம் போன்றவற்றுடன் கலந்து பயன்படுத்தலாம்.