அமெரிக்காவின் உயிரியல் பூங்காவில் 96 வருட வரலாற்றில் நிகழ்ந்த அதிசயம்…!!!

அமெரிக்காவின் உயிரியல் பூங்காவில் 96 வருட வரலாற்றில் நிகழ்ந்த அதிசயம்...!!!

அமெரிக்காவின் டெட்ராய்ட் உயிரியல் பூங்கா இந்த வாரம் ஒரு சிறப்புப் பிறப்பை வரவேற்றது.

மிருகக்காட்சிசாலையின் 96 வருட வரலாற்றில் முதல் கொரில்லா குட்டி பிறந்துள்ளது.

இந்த கொரில்லா குட்டியின் தாய், 26 வயதான பாண்டியா முதல் முதலில் குட்டியை ஈன்றுள்ளது.

தாய் கொரில்லா வியாழன் அன்று அதிகாலை குட்டி கொரிலாவை பெற்றெடுத்தது. தற்போது தாய் பாண்டியா, குட்டி கொரிலா ஆகியோர் நலமாக இருப்பதாக மிருகக்காட்சிசாலை தெரிவித்துள்ளது.

பிறந்த கொரிலாக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.

குட்டி கொரில்லா ஆணா பெண்ணா என்பது தெரியவில்லை.

தற்போது விலங்கியல் பூங்காவில் குட்டியுடன் சேர்த்து நான்கு கொரிலாக்கள் உள்ளன.

கொரில்லாவின் வருகைக்கான ஏற்பாடுகள் பல மாதங்களாக நடைபெற்று வந்தன.

பெரிய கொரில்லாக்களுக்கு பொம்மையைத் தூக்கி எப்படி குட்டி கொரில்லாவைத் தூக்குவது என்று செய்து காட்டினார்கள்.

பிறந்த கொரில்லாவை உடனடியாக பொதுமக்கள் பார்க்க முடியாது.

கொரில்லாக் குட்டிக்கு தாயுடனான உறவை வலுப்படுத்த கால அவகாசம் வழங்கப்படும் என விலங்கியல் பராமரிப்பு குழு தெரிவித்துள்ளது.

Follow us on : click here ⬇️