கடந்த 2022- ஆம் ஆண்டு ஏற்பட்ட வேலையிட மரணங்களின் எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டான 2021 விட கூடியுள்ளது.
இதனை சுகாதார மன்றமும், மனிதவள அமைச்சகம் வேலையிட பாதுகாப்பு ஆகிய இரண்டும் இணைந்து அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
2021-ஆம் ஆண்டில் வேலையிட மரணங்களின் எண்ணிக்கை விகிதம் 1.3.
ஆனால், கடந்த 2022-ஆம் ஆண்டு அதன் எண்ணிக்கை விகிதம் 1,00,000 ஊழியர்களில் 1.3 கூடியது.
கடந்த செப்டம்பரில் உயர் விழிப்புநிலை பாதுகாப்பு கால திட்டத்தை மனிதவள அமைச்சகம் தொடங்கியது.
இந்த திட்டம் வேலையிட மரணங்களைக் குறைப்பதற்காக அறிமுகம் செய்யப்பட்டது.
இத்திட்டம் நடைமுறையில் இருந்த காலத்தில் நிலைமை மேம்பட்டது.
மாத சராசரியாக 4.5 லிருந்து 2.5 ஆக வேலை இடங்களில் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை குறைந்தது.
பெரும்பாலும் அதிகமான மரணங்களும் விபத்துகளும் கட்டுமான துறையில் ஏற்படும். கட்டுமான துறையில் ஏற்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
கட்டுமான துறையில் அதிகமான முன்னேற்றம் காணப்பட்டது.
அதைத்தொடர்ந்து, உயர் விழிப்பு நிலை பாதுகாப்பு காலத்தை நீடிக்க அமைச்சகம் திட்டமிட்டது. அதனை அடுத்த மாதம் (மே ) இறுதிவரை மனிதவள அமைச்சகம் நீடித்துள்ளது.