சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் இணைய குற்றங்களைக் கையாள புதிய மசோதா தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாக இரண்டாம் உள்துறை அமைச்சர் Josephine Teo தெரிவித்தார்.
இதனை உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது என்றார்.இந்த புதிய சட்டத்தை இணைய குற்றத் தீங்குச் சட்டம் எனும் Online Criminal Harms Act என்று அழைக்கப்படும்.
இந்த புதிய சட்டம் நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டால் நேரடி குற்றங்களைத் தூண்டும் வகையில் இருக்கும் இணைய உரையாடல்களை நீக்குவதற்கும்,அதனை நிறுத்துவதற்கும் அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கப்படும்.
அண்மையில் ஒளிபரப்புச் சட்டம் திருத்தப்பட்டது. இது பயனீட்டாளர்களின் பாதுகாப்பைப் பாதிக்கும் இணைய வன்முறையைக் கையாளும்.இச்சட்டம் திருத்தப்பட்டதைக் குறிப்பிட்டார்.
தற்போது இணைய குற்றங்கள் பல விதங்களில் உருமாறி வருகிறதாகவும் கூறினார்.
இணைய குற்றங்களின் மையப்பொருளை தகவல் தொடர்பு மேம்பாட்டு ஆணையத்தால் இதை நிறுத்த முடியும்.