சிங்கப்பூர் F16 போர் விமானம் விபத்துக்குள்ளான காரணத்தை வெளியிட்டுள்ளது பாதுகாப்பு அமைச்சகம்!!

சிங்கப்பூர் F16 போர் விமானம் விபத்துக்குள்ளான காரணத்தை வெளியிட்டுள்ளது பாதுகாப்பு அமைச்சகம்!!

சிங்கப்பூர்: கடந்த மாதம் விபத்துக்குள்ளான சிங்கப்பூர் விமானப்படைக்கு சொந்தமான F-16 விமானத்தின் காரணத்தை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

விமானத்தின் கட்டுப்பாட்டு கூறுகளில் தேய்மானம் ஏற்பட்டதே இதற்குக் காரணம் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் விமானப்படை கட்டுப்பாட்டு கருவியை தொடர்ந்து சரிபார்க்க முடிவு செய்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தெங்கா விமானப்படை தளத்தில் கடந்த மாதம் 8ம் தேதி எஃப்-16 போர் விமானம் விபத்துக்குள்ளானது.

விமானி தன்னை விடுவித்து பத்திரமாக வெளியேறி உள்ளார்.

மேலும் எதிர்காலத்தில் இவ்வாறான விபத்துக்கள் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விபத்துக்குப் பிறகு, தெங்கா விமானப்படை தளத்தில் பயிற்சிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

சுமார் 2 வார விசாரணைக்குப் பிறகு விபத்துக்கான காரணம் தெரிய வந்ததுடன், பயிற்சிகள் மீண்டும் தொடங்க ஆரம்பித்துள்ளன.