சீனப் புத்தாண்டின் போதும் அயராமல் உழைக்கும் ஊழியர்களைப் பாராட்டிய அமைச்சர்!!
சீனப் புத்தாண்டு காலத்தில் வேலை செய்பவர்களை மனிதவள அமைச்சர் டான் சீ லெங் பாராட்டினார்.
SMRT நிறுவனம் மரின் பரேட் தொகுதியில் போக்குவரத்து துறையைச் சேர்ந்தவர்களை கௌரவிக்கும் வகையில் நடத்திய நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பேசினார்.
விடுமுறை காலத்தை முன்னிட்டு அதிகப்படியான ஊழியர்கள் வேலையில் ஈடுபடுகின்றனர்.
பண்டிகை காலங்களில் பலர் கொண்டாடும் அதே வேளையில் பல முக்கிய செயல்பாடுகள் தொடர்வதை உறுதி செய்யும் ஊழியர்களைப் பற்றி திரு.டான் பேசினார்.
பெரும்பாலான சில்லறை வணிகங்களில் அதன் தலைமையகத்தைச் சேர்ந்த சுமார் 500 ஊழியர்கள் தொடர்ந்து வேலையில் ஈடுபட்டனர்.
அந்த நடவடிக்கைகள் நீண்ட நேரங்கள் மற்றும் கூடுதலான வாடிக்கையாளர்கள் வருகையைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
சீனப் புத்தாண்டு விடுமுறையின் போது போக்குவரத்து துறை,சுகாதாரப் பராமரிப்பு மற்றும் பேரங்காடிகள் திறந்திருக்கும்.
சீனப் புத்தாண்டின் முதல் நாளன்று FairPrice நிறுவனம் சுமார் 151 கடைகளைத் திறந்திருந்தது.
அந்த கடைகளில் 42 பேரங்காடிகள் 24 மணி நேரமும் செயல்படுகிறது.
FairPrice நிறுவனம் தனது முழுநேர ஊழியர்களின் கடின உழைப்பைக் கௌரவிக்கும் வகையில் ஆண்டுக்கு $300 வெள்ளி வரை சன்மானமாக வழங்குகிறது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan