48 வயதுடைய சீனா நாட்டை சேர்ந்த மரவேலை செய்யும் Hu Zhangwen என்பவர், 54 வயதான மலேசியரின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதற்காக மூன்று வாரங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மலேசியர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததால் அவரது கை, தோள்பட்டை மற்றும் மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டி இருந்தது. அதனால் அவர் 12 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு மருத்துவ விடுமுறையும் கொடுக்கப்பட்டுள்ளது.
Hu Zhangwen, சாலை விதிகளை பின்பற்றாமல், சாலையை கடக்க முயன்ற போது இந்த விபத்து ஏற்பட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.