வேலை பார்க்கும் இடத்தில் நூற்றுக்கணக்கான Vapes எனப்படும் மின் சிகரெட்டுகளை வைத்திருந்த குற்றத்திற்காக 36 வயதான Marcus Chen Jun Ming என்ற நபருக்கு S$13,700 அபராதம் விதிக்கப்பட்டது.
அவைகளை விற்று சுமார் $10,000 சிங்கப்பூர் டாலரை லாபம் பார்த்துள்ளார்.அதனை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதி அன்று சுகாதார அறிவியல் ஆணைய அதிகாரிகளுக்கு, Marcus மின் சிகரெட்டுகளை விற்பனை செய்வது குறித்த ரகசிய தகவல் அளிக்கப்பட்டது.
இந்த தகவலை அடுத்து அதிகாரிகள் Marcus-ன் வேலையிடம் மற்றும் அவரது வீட்டில் சோதனை நடத்தியதில், அவர் தடைசெய்யப்பட்ட பொருட்களை வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
அதிகாரிகள் அந்த பொருட்களை பறிமுதல் செய்து, Marcus-ஐ கைது செய்தனர்.
தடை செய்யப்பட்ட பொருட்களை வைத்திருப்பது குற்றமாகும்.
இது போன்ற குற்றங்களுக்கு S$10,000 வரை அபராதம், 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.