சிங்கப்பூருக்கு புறப்பட்ட விமானத்தில் திருடிய குற்றச்சாட்டை மறுத்துள்ள நபர்!! “நான் விமானத்தில் திருடவில்லை”

சிங்கப்பூருக்கு புறப்பட்ட விமானத்தில் திருடிய குற்றச்சாட்டை மறுத்துள்ள நபர்!! "நான் விமானத்தில் திருடவில்லை"

கோலாலம்பூரில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் scoot விமானத்தில் சீனாவைச் சேர்ந்த 51 வயதுடைய Zhang Kun என்பவர் 200 வெள்ளி,100 ரிங்கிட் ரொக்கத்தையும்,கடன்பற்று அட்டையையும் அவர் திருடியதாக சந்தேகிக்கப்படுகிறது.

இருக்கைக்கு மேல் பைகளை வைக்கும் இடத்தில் மற்றொரு பயணியின் பையில் இருந்து பொருட்களை அவர் எடுத்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தை நேரில் கண்டதாக ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஸாங் மீது மார்ச் 18 ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டது.

அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

தாம் பொருட்களை திருடவில்லை என்று அவர் கூறினார்.

திருடப்பட்ட பொருட்கள் தம்மிடம் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் கூறினார்.