பிரேசிலின் சால்வடார் நகரில் தனது காதலியையும், டாக்ஸி டிரைவரையும் கத்தியால் குத்த முயன்றதாக 30 வயதுடைய அமெரிக்க குடிமகனான Zachary Modi Mikaya மீது குற்றம் சாட்டப்பட்டது.
அவரை காவல்துறையினர் கைது செய்ய முயன்ற போது ஹோட்டல் அறையின் ஜன்னல் வழியாக கீழே குதித்து உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் அவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருப்பதாக அவர்கள் கூறினர்.
போலி ஆவணங்களை வைத்து ஹோட்டலில் தங்கி இருந்ததால் அவரை கண்டுபிடிக்க காவல்துறையினர் சிரமப்பட்டனர்.
மேலும் அவர் தனது அடையாளத்தை மறைக்க தலைமுடியை வெட்டியதாக அவர்கள் கூறினர்.
ஹோட்டல் ஊழியரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.