பாதிரியாரை தாக்கிய ஆடவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது..!!!

பாதிரியாரை தாக்கிய ஆடவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது..!!!

சிங்கப்பூர்: புக்கிட் தீமாவில் உள்ள செயின்ட் ஜோசப் தேவாலயத்தில் பாதிரியாரைக் கத்தியால் குத்தியதாக நம்பப்படும் நபர் மீது இன்று திங்கள்கிழமை (நவம்பர் 11) ஆபத்தான ஆயுதத்தால் வேண்டுமென்றே கடுமையான உடல் காயம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.

பாஸ்நாயக கீத் ஸ்பென்சர்  என அடையாளம் காணப்பட்ட 37 வயதுடைய நபர், திங்கட்கிழமை காலை 10.10 மணியளவில் காணொளி மூலம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

சிங்கப்பூரைச் சேர்ந்த சிங்களவரான அவர், நீதிமன்ற நடவடிக்கைகளின் போது முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியுமின்றி தோன்றினார்.

பாஸ்நாயகவின் மன ஆரோக்கியத்தை பரிசோதிப்பதற்காக அவரை மூன்று வாரங்களுக்கு சாங்கி சிறைச்சாலை வளாக வைத்தியசாலைக்கு தடுப்பு காவலில் வைக்குமாறு அரசாங்க தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாஸ்நாயக்க மீதான வழக்கு டிசம்பர் 2ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

தாக்கப்பட்ட பாதிரியார் வாயில் கத்தியால் குத்தப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.

கூட்டுப் பிரார்த்தனை நடந்து கொண்டிருந்த வேளையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த கொடூர தாக்குதலில் பாதிரியாரின் நாக்கு எட்டு சென்டிமீட்டர் நீளத்திற்கும் மேல் உதட்டில் மூன்று சென்டிமீட்டர் நீளத்திற்கும், வாயின் ஓரத்தில் நான்கு சென்டிமீட்டர் நீளமுள்ள வெட்டுக்காயங்களும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், தாக்குதலுக்கு உள்ளான பாதிரியார் கிறிஸ்டோபர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் சீரான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் வரையில் தொடர் மருத்துவ சிகிச்சையில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டது.