சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இ-சிகரெட் விநியோக வளையத்தின் தலைவன் என நம்பப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேக நபர் 33 வயது மதிக்கத்தக்கவர் என கூறப்படுகிறது.
சிங்கப்பூர் காவல்துறை மற்றும் சுகாதார அறிவியல் ஆணையத்தால் தீவு முழுவதும் நடத்தப்பட்ட வேட்டையில் அக்டோபர் 10ஆம் தேதி அந்த நபர் பிடிபட்டார்.
அந்த நபர் மலேசியாவில் இருந்து இ-சிகரெட்டுகளை இறக்குமதி செய்து சிங்கப்பூரில் விநியோகம் செய்ததாக கூறப்படுகிறது.
அவரிடமிருந்து சுமார் 6.5 மில்லியன் வெள்ளி மதிப்புடைய மின்- சிகரெட்டுகளை அறிவியல் ஆணையம் கைப்பற்றியது.இ-சிகரெட் விற்பனை தொடர்பாக அவர் மீது அக்டோபர் 11ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அவர் மீது நீதியைத் தடுத்தல், கொள்ளை, மோசடி மற்றும் நேர்மையின்மை, சட்டவிரோதமாக பொருளை விற்பனை செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.அந்த நபர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.