முதலாளியிடம் கைவரிசை காட்டிய பணிப்பெண்...!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வீட்டு வேலைச் செய்யும் பணிப்பெண் ஒருவர் தனது முதலாளியிடம் 8,000 வெள்ளிக்கும் அதிகமான பணத்தை திருடியதற்காக 4 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவைச் சேர்ந்த உமினி பொஜோக் சனியா என்ற பெண் ஒன்றரை வருடமாக பணத்தை திருடி வந்தது தெரியவந்துள்ளது.
காவல்துறையை நடத்திய விசாரணையில் திருட்டு குறித்த பல தகவல்கள் வெளிவந்துள்ளது.
அந்தப் பெண் 2022 ஆண்டிலிருந்து முதலாளியின் பெட்டகத்திலிருந்தும் படுக்கை அறையில் இருந்தும் பணத்தை திருடி வந்துள்ளார்.
திருடிய பணத்தை அவர் தனது வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
முதலாளியின் பெட்டகத்தில் இருந்த 2,500 வெள்ளி மதிப்புள்ள தங்கச் சங்கிலி திடீரென மாயமானது.
திருடிய நகையை உமினி கழிப்பறையில் மறைத்து வைத்தார்.அதனை தன்னுடன் இந்தோனேஷியா எடுத்துச் செல்ல திட்டமிட்டிருந்தார்.
படுக்கையறையில் பரிசு உறையில் இருந்த பணம் காணாமல் போனதை முதலாளி கவனித்தார்.
இதனால் அவருக்கு பணிப்பெண்ணின் மீது சந்தேகம் வலுத்தது.
இது குறித்து பணிப்பெண்ணிடம் கேட்டதற்கு அவர் பணத்தை திருடவில்லை என்று கூறியுள்ளார்.
அவளை கடந்த மாதம் தாயகத்துக்கு திருப்பி அனுப்புவதாக முதலாளி சொல்லியிருந்தார்.
அவரிடம் அப்படியே திருட்டு குறித்தும் கேட்டறிந்தார்.
அப்போது பணிப்பெண் தான் செய்ததை ஒப்புக்கொண்டார்.
கழிவறையில் மறைத்து வைத்திருந்த நகைகளையும் திருப்பி கொடுத்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து முதலாளி காவல்துறையிடம் தகவல் கொடுத்தார்.
திருடிய குற்றத்திற்காக உமினுக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.
Follow us on : click here