மக்களை வியப்படையவைத்த மக்காக்…… சிங்கப்பூர் தேசிய பூங்கா வாரியம் அறிவுரை…..

சிங்கப்பூரில் வாழும் நீண்ட வால் கொண்ட மக்காக் எனும் குரங்கு இனம் இவ்வளவு உயரம் ஏறுமா என்று பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இச்சம்பவம் ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி அன்று காலை சுமார் 9.30 மணியளவில் நிகழ்ந்தது.

பொட்டாங் பாசிரில் உள்ள சான்ட் ரிட்ஸ் காண்டோவில் அடுக்குமாடி குடியிருப்பில் 15-வது மாடியில் வசிக்கும் ஸ்டாம்பர் ஓங் தான் கண்ட ஆச்சரியமான சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

சுமார் ஐந்து குரங்குகள் தனது பால்கனியில் சுற்றித்திரிந்ததைக் கண்டு ஆச்சரியம் அடைந்ததைப் பற்றி கூறியுள்ளார்.

15-வது மாடியில் நாங்கள் வசித்தாலும் குரங்குகளால் இவ்வளவு உயரத்திற்கு ஏற முடியும் என்று நாங்கள் ஆச்சரியப்பட்டோம் என்றார்.

ஆகஸ்ட் 24-ஆம் தேதி ஓர் HDB பிளாக்கின் உயரமான தளத்தில் குரங்குகள் இருப்பது போன்ற மற்றொரு வீடியோவும் டிக்டாக்கில் பகிரப்பட்டுள்ளது.

இது குறித்து தேசிய பூங்கா வாரியம் பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளது. நீங்கள் வீட்டில் இருக்கும் போது விலங்குகளை சந்தித்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான அறிவுரையை வெளியிட்டது.