புரியாத பாசம் பிரியும் போது புரியும்!! ஸ்ரீஜா-செந்தில் உறவில் வந்த விரிசல்!!

புரியாத பாசம் பிரியும் போது புரியும்!! ஸ்ரீஜா-செந்தில் உறவில் வந்த விரிசல்!!

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் நடித்த சரவணனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. இவர் தொடக்கத்தில் வங்கித்துறையில் பணியாற்றி பின்பு கலைத்துறைக்கு வந்தவர். அதன் பிறகு ரேடியோ மிர்ச்சி என்ற வானொலி நிலையத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கியவர்.

மிர்ச்சி செந்தில் என பிரபலமாக அறியப்பட்ட செந்தில்குமார் தமிழ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் தவமாய் தவமிருந்து,பப்பாளி, வெண்ணிலா வீடு போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இசைஞானி இளையராஜாவால் பாராட்டப்பட்ட ‘நீங்க நான் ராஜா சார் ‘நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

விஜய் தொலைக்காட்சியில் 2007-2009ஆம் ஆண்டு வரை விருப்பப்பட்ட மதுரை தொடரில் ‘செய்கை சரவணன் ‘என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தார். அதன் பின்பு தான் சரவணன் மீனாட்சி என்ற நெடுந்தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் சரவணன் ஆக செந்தில்குமாரும், மீனாட்சி ஆக ஸ்ரீஜாவும் நடித்தனர். ரீல் ஜோடியில் இவரது கெமிஸ்ட்ரி நன்றாக இருந்த நிலையில், இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தேவ் என்ற ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில் இவர்கள் சமீபத்தில் யுடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்து, தங்களின் 10 ஆண்டுகால திருமண வாழ்க்கை பற்றி பகிர்ந்து கொண்டனர். அதற்கு செந்தில், அனைவரின் வாழ்க்கையிலும் இருப்பது போல அனைத்து சண்டை சச்சரவுகளும் எங்களுடைய வாழ்க்கையிலும் இருந்தது. காதலிக்கும் போது இருந்த புரிதல் திருமணத்திற்கு பிறகு இல்லை. இந்த புரிதல் இல்லாத போது இருவருக்கும் இடையே சண்டை ஏற்படுகின்றது. இதை அனைத்தையும் கடந்து வந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிப்பார்கள் என்று கூறினார். எங்கள் இருவருக்கும் இடையில் சண்டை என்ற ஒன்று இல்லை என்று சொல்ல மாட்டோம். சின்ன பிரச்சனைகள் கூட சில சமயங்களில் பெரியதாகிவிடும்.ஆனால் என் மகன் தேவ் பிறந்த பிறகு கரடு முரடான எங்கள் வாழ்வில் தெளிந்த நீரோடை போன்ற வழி பிறந்தது. நாங்கள் இருவரும் சேர்ந்து இப்போது என் மகனை ரசிக்கிறோம் என்று கூறினார்.

இது குறித்து ஸ்ரீஜா பேசுகையில், இருவரும் சில சமயங்களில் பயங்கரமாக சண்டை போடுவோம். நான் அடிக்கடி என் அம்மா வீட்டிற்கு போறேன் என்று சொல்லுவேன். ஒரு கட்டத்தில் மெச்சூரிட்டி வந்த பிறகு சண்டை போடுவது இல்லை. அதற்காக சண்டையே இல்லை என்று சொல்ல மாட்டோம். இப்போதும் சண்டை வரும் ஆனால் அந்த அளவிற்கு இல்லை உடனடியாக பேசி விடுவோம். இதற்குப் புரிதலா, காதலா அல்லது அதற்கு பெயர் எப்படி வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம் என்று கூறினார்.