Temasek நிறுவனம் FTX மின்னிலக்க நாணய நிறுவனத்தில் 275 மில்லியன் டாலர் முதலீடு செய்திருந்தது.அதில் இழப்பு ஏற்பட்டது.அந்த இழப்பிற்கு Temasek நிறுவனத்தின் முதலீட்டு குழுவும்,மூத்த நிர்வாகமும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளன.
அவர்களின் சம்பளமும் குறைக்கப்பட்டதாக குறிப்பிட்டது.
FTX நிறுவனத்தில் மோசடி நடவடிக்கைகள் நடைபெற்றதாகவும், அது வேண்டுமேன்றே Temasek உள்ளிட்ட முதலீட்டாளர்களிடமிருந்து மறைக்கப்பட்டதாகவும் நிறுவனத்தின் தலைவர் லிம் பூன் ஹெங் கூறினார்.
முதலீடு தோல்வி அடைந்தது ஏமாற்றம் அளிப்பதாகவும் கூறினார்.
அது நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட காரணமாக அமைந்ததாக அவர் சொன்னார்.
சுயேச்சைக் குழு மறுஆய்வு நடத்தியது.அதில் Temasek நிறுவனத்தின் முதலீட்டு குழு எந்தத் தவறு செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளதாக லிம் கூறினார்.
எனினும், அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டு சம்பளத்தைக் குறைத்து கொண்டனர்.
எத்தனை ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர், எவ்வளவு சம்பளம் குறைக்கப்பட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.